குன்னூரில் புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடக்க விழா: - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 15 March 2026

குன்னூரில் புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடக்க விழா:


 குன்னூரில் புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடக்க விழா: 


இலவச அமரர் குளிர்சாதனப் பெட்டி மற்றும் சிசிடிவி கேமராக்கள் இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வும் கேமராக்கள்  வழங்கப்பட்டன

குன்னூர், மார்ச் 15: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட், பேரக்ஸ் பகுதியில் உள்ள சின்ன வண்டிச்சோலை புனித அந்தோணியார் குருசடி வளாகத்தில், பொதுமக்களுக்கான புதிய சேவைத் திட்டங்கள் தொடக்க விழா இன்று (15.03.2026) மாலை 3:00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இலவச அமரர் குளிர்சாதனப் பெட்டி (Freezer Box) வழங்கல்: தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில், குன்னூர் மக்களின் அவசரப் பயன்பாட்டிற்காக இலவச அமரர் குளிர்சாதனப் பெட்டி (Freezer Box) இன்று கையளிக்கப்பட்டது. பிறரின் துயர் துடைக்கும் நோக்கில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கிராம வளர்ச்சி மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள்: சின்ன வண்டிச்சோலை மற்றும் மலையப்பன் காட்டேஜ் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, மலையப்பன் காட்டேஜ் 5 மற்றும் 6-வது வார்டு பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்துவதற்கான பங்களிப்பு வழங்கப்பட்டு, அவை முறைப்படி திறந்து வைக்கப்பட்டன.

பங்கேற்பாளர்கள்: இந்நிகழ்விற்கு நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்புத் தலைவர் திரு. சுரேஷ் ரமணா வரவேற்புரை ஆற்றினார். நீலகிரி மக்கள் நற்பணி மய்யம்  பொதுச் செயலாளர் பொறியாளர் திரு. விஜயகாந்த் முத்துகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக: அருட்தந்தை பிரான்சிஸ் மைக்கில் திரவியம் (பங்குத்தந்தை, புனித சூசையப்பர் ஆலயம்) திரு. ராஜேந்திரன் (சப்-இன்ஸ்பெக்டர், அப்பர் குன்னூர்) திருமதி. உஷா பிராங்க்ளின் (சமூாக ஆர்வலர்) இன்ஜினியர் கலைவாணி விஜயகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், கூடலூர் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை சாதிக், நீலகிரி educational trust ஜாபர், வெளிச்சம் அறக்கட்டளை டெய்சி, த்ரீ ஸ்டார் ஆம்புலன்ஸ் அயூப், குன்னூர் ஆம்புலன்ஸ் சல்மான் மற்றும் 43 ஜூட் வழக்கறிஞர் தினேஷ் தன்னார்வலர்கள், ஊர் பெரியோர்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்றனர்.

புனித அந்தோணியார் பஜனை சங்கத் தலைவர் திரு. டோனி ஜேக்கப் ஜெரால்ட்   Tony எட்வின் ஏற்பாடுகள் செய்கின்றனர் நிகழ்ச்சியை செல்வி. ஆஷா தொகுத்து வழங்கினார். முன்னதாக வரவேற்பு நடனம் மேனகா நடந்த பள்ளி மனைவி  நிறைவாக, கண்டோன்மென்ட் திரு. வினோத்குமார் நன்றி கூறினார்.

​மனிதம் காக்கும் மாண்பு!

​குன்னூர் குருசடி நிழலினிலே

கூடி நின்றார் நல்மனங்கள்!

கண்ணீர் துடைக்கக் கைகொடுத்தார் - குளிர்

சாதனப் பெட்டி தானம் தந்தார்!

​வண்டிச் சோலை வனப்புறவும் - மக்கள்

வாழ்வு உயர்ந்து செழிக்கவும்

திட்டங்கள் பல தீட்டி நின்றார் - ஊர்

தேவையறிந்து பூட்டி நின்றார்!

​விழிகள் காக்கக் கேமராக்கள் - எங்கள்

வழிகள் காக்க நல் உள்ளங்கள்!

தன்னார்வத் தொண்டால் தழைக்குமே - இந்த

நீலகிரி மாவட்டப் பெருமையே 

No comments:

Post a Comment

Post Top Ad