“என் வாக்கு என் உரிமை”
என் வாக்கு என் உரிமை” என்பது ஜனநாயகத்தின் அடிப்படைச் சின்னமாகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் சக்தியாக வாக்குரிமை உள்ளது. சுதந்திரமாகவும், எந்த அழுத்தமுமின்றியும், பணம் அல்லது பேராசை இன்றி வாக்களிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கும் நல்லாட்சிக்கும் வழிவகுக்கும். ஒரு வாக்கு கூட மாற்றத்தை உருவாக்கும் என்பதால், வாக்குரிமையைப் பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.
கோவை மாவட்டம் – காரமடையில் “என் வாக்கு என் உரிமை” விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் தலைமையில் “என் வாக்கு என் உரிமை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி காரமடை நகராட்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலர் திருமதி பெனாசீர் பேகம் முன்னிலையில், “சுதந்திரமாக வாக்களிப்போம் – சுதந்திரத்தை பேணி காப்போம்” என்ற வாசகத்துடன் அலுவலர்கள் கை பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காரமடை நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு, காரமடை நகராட்சி அலுவலகம் முதல் அரங்கநாதர் கோயில் வரை பேரணியாக சென்று, வாக்குரிமையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியின் மூலம், மக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை உணர்ந்து, எந்த விதமான அழுத்தங்களும் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, தேர்தல் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
கோவை செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர் கார்த்திக்...

No comments:
Post a Comment