குன்னத்தூர் ந.ர.கருப்பண்ண நாடர் உயர்நிலை பள்ளியில் 86-91 கல்வியாண்டில் படித்த மாணவ-
மாணவியர்கள் முப்பத்தாண்டிற்கு பிறகு ' சங்கமம்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறுபத்திற்கு மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவியர்கள் தங்களின் குடும்பத்தாருடன் கலந்துகொண்டனர்
இந்நிகழ்ச்சியில் முன்னாள்
மறைந்த
ஆசிரியர்கள், தங்களுடன் பயின்ற மறைந்த நண்பர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தங்களுக்கு பாடம் கற்பித்த
இருபால்
ஆசிரியர்களை கௌரவித்தல்
நிகழ்ச்சியல் திரு.PS.ராகேஷ்ராவ்,திரு.V.மணி, திருமதி.D.பத்மாவதி,திருமதி.பச்சையம்மாள்,திருமதி.சிவகாமி,திரு.காளிமுத்து,திரு. ரங்கநாதன்,திரு.திருமூர்த்தி,
மற்றும் திரு. திருமுருக ராஜா ஆகியோர் கலந்து கொண்டு தங்களின்
வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும்,அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் முன்னாள் மாணவ மாணவியர்கள் தங்களின் மலரும் நினைவுகளையும் தங்களின் அறிமுக உறையில் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து பாட்டுப்போட்டி, பலூன் உடைத்தல், இசை நாற்காலி போன்ற போட்டிகள்
நடத்தப்பட்டது .இந்நிகழ்ச்சிக்கு
முனைவர் கே.ஜிபார்த்திபன்
வரவேற்புரை ஆற்றினார்
இறுதியாக திரு ந சுரேஷ் பாபு நன்றி கூறினார் .
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருமதி திவ்யா ஜெயக்குமார்,
திருமதி ராஜேஸ்வரி ,திரு மோகன் ராஜ் திரு மோகன சுந்தரம் உட்பட
முன்னாள் மாணவர்கள் சிறப்புற செய்திருந்தனர் .
No comments:
Post a Comment