டிசம்பர் 23, 2024 அன்று தானிஷ் அகமது தொழில்நுட்ப கல்லூரியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி கோவை கா.கா.சாவடி பகுதியில் அமைந்துள்ள தானிஷ் அகமது தொழில்நுட்பக் கல்லூரியில் “ஒரு கோடி மரம் பூமிக்கு நாம் தரும் வரம்” என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பகுதியில் தானிஷ் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி -பிச்சனூர், அரசு மேல்நிலைப்பள்ளி -குறிச்சி, அரசு மேல்நிலைப்பள்ளி- குனியமுத்தூர், பண்டிட் நேரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, யுனிக் இன்டர்நேஷனல் மாடல் ஸ்கூல்- நீலகிரி மற்றும் மாவுதம்பதி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சிறப்பு விருந்தினர்களும் கல்லூரியில் மாணவர்களும் பேராசிரியர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, மருத்துவர் மூர்த்தி, சமூக சேவகர் ஞானசேகர், அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பா.மகேஸ்வரி, சமூக அறிவியல் பேராசிரியர் திரு.ராதாகிருஷ்ணன், தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளர் எட்வின் பால் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே ஜி பார்த்திபன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு.தினேஷ்குமார், திரு.மனோஜ் பிரபாகர், ஈகோ கிளப் ஒருங்கிணைப்பாளர். மேலும் கல்லூரி பேராசிரியர்கள் திரு.தாரிக் ராஜா, முனைவர் முரளிதரன் மற்றும் திரு.முகமது ஜாபர் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment