கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்களிடம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் ஜாபர் சாதிக் அவர்கள் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது சென்னை ராயப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அர்ரஹீம் ஹஜ் சர்வீஸ் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக கூறி பல்வேறு மக்களை ஏமாற்றி உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்து வருவதாகவும் இந்நிலையில் அர்ரஹீம் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் சாதிக்பாட்ஷா கோவை மாநகரம் கரும்புக்கடை பகுதியில் அர்ரஹீம் ஹஜ் சர்வீஸ் கிளை அலுவலகம் திறந்து குறைந்த விலைக்கு புனித ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் செய்து வருவதால் நிறைய மக்கள் இதில் பணம் கட்டி ஏமாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் மற்றும் இந்நிறுவனத்திற்கு மத்திய அரசின் அங்கீகாரம் இல்லை என்பதால் சாதிக் பாட்ஷா கோவையில் திறந்து உள்ள அலுவலகத்தினை மூடவும் நடவடிக்கை எடுக்குமாறு தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.உடன் தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராமர், அலங்கியம் சரவணன், தாராபுரம் அபு, ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோவை செய்தியாளர் ல ஏழுமலை தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment