கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்லடம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீத்தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 810 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்கள்.
உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், மண்டலக்குழுத் தலைவர்கள் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), திருமதி.இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), திருமதி.ரெ.தனலட்சுமி (தெற்கு), திருமதி.மீனா லோகு (மத்தியம்), மாநகர நல அலுவலர் (பொ) மரு.கே.பூபதி, மண்டல உதவி ஆணையர்கள் திருமதி.சந்தியா(மேற்கு), திரு.செந்தில்குமரன்(மத்தியம்), திரு.முத்துசாமி(கிழக்கு), திருமதி.ஸ்ரீதேவி(வடக்கு), திரு.இளங்கோவன் (தெற்கு) (பொ), மாமன்ற உறுப்பினர்கள் திரு.அஸ்லாம் பாஷா, திரு.குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் (20.08.2024).
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சுதன்
No comments:
Post a Comment