18 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லை பொள்ளாச்சி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுயிட்ட பொதுமக்கள் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 28 August 2024

18 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லை பொள்ளாச்சி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுயிட்ட பொதுமக்கள்



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சக்திநகர், பொன்நகர், சாய்நகர், காஸ்மோ வில்லேஜ்  பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து   வருகின்றனர்  கடந்த 18 ஆண்டுகளாக இந்த குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்கு,குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகம் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் இன்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது கடந்த 18 ஆண்டுகளாக குடிநீர், தெரு விளக்கு,சாலை வசதி போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை சாலை வசதி இல்லாததால் வாகனங்களில் செல்ல முடியவில்லை அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது மேலும் இரவு நேரங்களில் அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது உடனடியாக இப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad