பல வருடங்களாக பல லட்சக்கணக்கான பொதுமக்கள், இறந்தவர்களுக்கான கர்ம காரியம் செய்த பின்பு மன ஆறுதல் வேண்டி வணங்கி வரும் ஆத்ம லிங்கம் முக்திலிங்கம் சேதம் அடைந்துள்ளது எனக் கூறி, அந்த இடத்தில் இருந்து அகற்றி விடலாம் என தீர்மானம் போட்டுள்ளார்கள். ஏற்கனவே அங்கு இருந்த கருப்பராயன், கன்னிமார் சிலைகளையும் அகற்றி உள்ளார்கள். ஒரு வருடத்திற்கு மேலாகிறது. அதுவும் எங்கு உள்ளது என்று தெரியவில்லை என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.
தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வணங்கி வரும் ஆத்ம லிங்கம் முக்தி லிங்கம், ஆகிய லிங்கங்களை அகற்ற நினைப்பதே கண்டனத்துக்குரியது , மேலும் வேறு இடத்திற்கு பாலாலயம் செய்து மாற்றிவிடலாம் கோவில் கட்டி வைத்து விடலாம் எனக்கூறி அந்த இடத்திலிருந்து, நகராட்சி அனுமதி இல்லாமலோ வருவாய்த் துறையின் அனுமதி இல்லாமலோ சிலைகளை அகற்ற நினைப்பதும் கண்டனத்துக்குரியது. இதை இந்து சமுதாய நல சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட ஒளிப்பதிவாளர் பிரதீப் குமார்.
No comments:
Post a Comment