மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தினால் பில்லூர் அணை தன் முழு கொள்ளளவை எட்டியது இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீரானது அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது. வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பவானி ஆற்றங்கரையோரம் இருக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, இறங்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்து இருக்கிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக தமிழக குரல் கோவை செய்தியாளர் கார்த்திக் ராஜன்.
No comments:
Post a Comment