மருதமலை பகுதியில் மீட்கப்பட்ட குட்டி யானை உடல் நல குறைவால் உயிர்இழந்தது வன ஆர்வலர்கள் துயரம்
முதுமலை புலிகள் காப்பகம், உதகை கோட்டம், யானைகள் முகாம் சரகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த 09.06.2024 தேதியன்று கோவை வனக்கோட்டம், மருதமலை பகுதியில் மீட்கப்பட்ட குட்டி.யானை பராமரிக்கப்பட்டு வந்தது .
இந்த நிலையில் ஆண் குட்டியானைக்கு இன்று 28.6.2024 தேதி உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது .
இந்த குட்டி.யானை சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8.45 மணி அளவில் உயிரிழந்தது.
. கள இயக்குநர் முதுமலை புலிகள் காப்பகம் அவர்களின் அறிவுரை படி துணை இயக்குநர் மசினகுடி கோட்டம் அவர்களின் முன்னிலையில் நாளை காலை சுமார் 9.30 மணியளவில் பிரேத பரிசோதனை நடைபெறும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
மருதமலை பகுதியில் மீட்கப்பட்ட குட்டி யானை உடல் நல குறைவால் உயிர் இழந்தது. வன ஆர்வலர்கள் இடையே துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத்குமார்.
No comments:
Post a Comment