கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சர்வதேச அளவிலான கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக, ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை வளாகத்தினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (14.06.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.அதுல்யா மிஸ்ரா இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ப.ராஜ்குமார், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிச்செல்வன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை செய்தியாளர் சுதன்
No comments:
Post a Comment