கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு.அன்பழகன், மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர் திருமதி.பிரபா ரவீந்திரன், நகரமைப்பு அலுவலர் திரு.குமார், உதவி நகர திட்டமிடுநர் திரு.கோவிந்த பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை செய்தியாளர் சுதன்
No comments:
Post a Comment