கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட புரூக்பாண்ட் சாலை தேவாங்கபேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைந்துள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் புதிய வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு.அன்பழகன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், நகரமைப்பு அலுவலர் திரு.குமார், உதவி நகர திட்டமிடுநர் திரு.கோவிந்த பிரபாகரன், உதவி பொறியாளர்கள் திரு.கமலக்கண்ணன், திரு.சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை செய்தியாளர் சுதன்.
No comments:
Post a Comment