கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப அவர்கள் இன்று மேற்கு மற்றும் தெற்கு ஆகிய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள குளங்களின் நீர்வழிப் பாதைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கிருஷ்ணம்பதி குளம் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்வபுரம் நொய்யல் ஆற்றின் குறிச்சி அணைக்கட்டு மற்றும் மற்றும் வெள்ளலூர் வாய்க்கால் ஆகிய குளங்களில் நீர்வழிப் பாதையினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழை நீரை முழுமையாக குளங்களில் சேமிக்கும் வகையில் நீர்வழிப் பாதைகளில் அமைந்துள்ள செடி கொடிகளை முழுமையாக அகற்றிடவும், பாதைகளில் உள்ள மண்களை அகற்றிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவை மாவட்ட செய்திகளுக்காக கோவை மாவட்ட தாலுக்கா செய்தியாளர் சுதன்.
No comments:
Post a Comment