கோவை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்,பருவமழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக அணைகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை தூர்வார வேண்டும் என்றும்,
புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியும், லாரிகள் மூலமும் பொதுமக்களுக்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும்,
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கடைக்கோடி கிராமங்களான காபுலிபாளையம், காட்டம்பட்டிபுதூர், தாசநாயக்கன்பாளையம், வடசித்தூர் மற்றும் பொள்ளாச்சி மேற்குபகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை. மற்ற கிராமங்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற தொகுதிகளிலும் பல்வேறு இடங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை, சூலூர் சட்டமன்றத் தொகுதியில் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும்,
சீரான குடிநீர் விநியோகத்தை கருத்தில் கொண்டு, நீர் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும்,
கோவை மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும்,
ஆணைமலை ஒன்றியம் கம்பாளப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தோம்.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்,
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்ட குப்பைத் தொட்டிகளை மீண்டும் அனைத்து வார்டுகளிலும் வைத்து, தினசரி குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட இக்கரைப்போளுவாம்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஊர்நத்தம் (பூர்வீக சொத்து) ZERO Value ஆக மாறி இருப்பதால் அப்பகுதி மக்களால் தங்களின் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடிவதில்லை, பெயர் மாற்றம் செய்ய, பத்திரப்பதிவு செய்ய முடிவதில்லை. ஆகவே ZERO Value மதிப்பை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
கோவை மாவட்டம் முழுவதும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கழக தலைமை நிலைய செயலாளர் கழக கொறடா கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் S.P.வேலுமணிMLAஅவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்
இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி Vஜெயராமன்MLA, கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் அம்மன்Kஅர்ஜுனன் MLAஅவர்கள் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் PRGஅருண்குமார்மலை அவர்கள், AKசெல்வராஜ்MLA, அமுல்கந்தசாமிMLA, கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழக குரல் செய்தி பிரிவுக்காக கார்த்திக் ராஜன் கோயம்புத்தூர் வட்ட செய்தி பிரிவு
No comments:
Post a Comment