வெற்றிக்கு சலாம் போடும் நண்பர்கள் மகளுக்கு உதவி செய்யும் தாயார் தேர்வுக்கு ஊக்கப்படுத்தும் கல்விக்கூடம் மாணவ மாணவிகளுக்கு கருணை காட்டும் தமிழக அரசாங்கம்
பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இத்தேர்வை 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர் 26 மார்ச் முதல் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது பள்ளி மாணவ, மாணவிகள் 9.10 லட்சம் பேர், தனி தேர்வர்கள் 28,827 பேர், சிறை கைதிகள் 235 பேர் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதிக் கொண்டு உள்ளனர். இதற்காக 4,107 தேர்வு மையங்களும், தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 4,591 பறக்கும்படைகளும் தேர்வு கண்காணிப்புபணியில் 48,700 ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் காட்டூர் மணிநகர் பகுதியில் வசித்து வரும் லீனா கிரேசி இன் மகள் தர்ஷனா ஸ்ரீ மாணவி மேட்டுப்பாளையம் மகாஜனா பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தாங்கள் வசித்து வரும் வாடகை வீட்டின் முதல் தளத்திலிருந்து இருந்து தவறி கீழே விழுந்து முதுகெலும்பு முறிந்த நிலையில் தேர்வு எழுத ஆர்வம் கொண்ட மாணவி தனது தாயார் லீனா கிரேசி இடம் தெரிவிக்க வாகன வசதி இல்லாததால் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும்
தென்றல் அறக்கட்டளை மேட்டுப்பாளையம் நகரிலும் சமூக சேவை செய்து வருகிறது தென்றல் அறக்கட்டளை நிர்வாகி ஷேக் மற்றும் தென்றல் அபு அவர்களிடம் உதவிக்கோரிய நிலையில் சமூகப் பணியாற்றி வரும் தென்றல் அவசர ஊர்தியில் பள்ளி மாணவியின் வீட்டிலிருந்து தேர்வு மையம் வரை தங்களது அவசர ஊர்தி வாகனத்தில் இலவசமாக கொண்டு வந்து விடுகின்றனர், தேர்வு எழுதிய பின்பு மாணவி மற்றும் மாணவியின் பெற்றோர் ஆகியோரை வீட்டிற்கு திரும்பவும் கொண்டு வந்து விடுகின்றனர்
மேட்டுப்பாளையம் தென்றல் அறக்கட்டளை நிர்வாகி ஷேக் அவர்களிடம் மாணவிக்கு செய்யும் உதவியை குறித்து கேட்கும்பொழுது மேட்டுப்பாளையம் பொது மக்களுக்கு என்று நாங்கள் நிறைய உதவிகளை செய்து வருகிறோம் குறிப்பாக குறைந்த கட்டணத்தில் எங்கள் அவசர உறுதியை சமயம் பாராமல் இயக்கி வருகிறோம் அதன் ஒரு பகுதியாக தனியார் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் சகோதரி லீனா கிரேஸ் எங்களிடம் உதவி கூறிய நிலையில் அவர்களுக்கு எங்களால் இயன்ற இந்த பணியை இலவசமாக செய்து வருகிறோம் கல்விக்கு மற்றும் பொதுமக்களுக்கு செய்யும் உதவியை நாங்கள் நன்மையாக கருதுகிறோம் எங்களுக்கு இந்த புனித மாதத்தில் இறைவன் நன்மை தருவாராக என்று கூறினார்
இவர்களின் சமூக பணியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பள்ளி மாணவியுடன் படித்து வரும் குழந்தைகளும் பாராட்டுகின்றனர் மாணவ மாணவிகளின் கல்விக்காக அயராமல் உழைத்து வரும் தமிழக அரசுக்கு நன்றி
No comments:
Post a Comment