வரும் 19.4.2024 அன்று தமிழகத்தில் இந்தியாவின் நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடைபெறுகின்றது.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் 10.4.2024 புதன் கிழமை அன்று நீலகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் டாக்டர் L.முருகன் மற்றும் கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பா.ஜ.க. தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு தாமரை சின்னத்தில் ஓட்டு சேகரிக்க இந்திய பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கும் கோவைமாவட்டத்திலும் உள்ள மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரிக்க பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் திரு.நரேந்திர மோடி வருவதால் பாது காப்பு கருதி கோவை மாவட்டத்தில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கோவை நீலகிரி மாவட்ட காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment