கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(29.04.2024)செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, அரசுப் பொருட்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் திரு.பண்டரிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திருமதி.ப.மணிமேகலை, மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை டாக்டர்.ஆர்.பெருமாள்சாமி, மாவட்ட தொழில் பொதுமேலாளர் திருமதி.பா.சண்முகவடிவு, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.அருணா, மாவட்ட சமூக அலுவலர் திருமதி.ஆர்.அம்பிகா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் திருமதி.புவனேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ஆ.செந்தில்அண்ணா மற்றும் அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,கோயம்புத்தூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஆண்டுதோறும் அரசுப்பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு அரசுப் பொருட்காட்சியானது கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி மைதானத்தில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட்டு, 45நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.இப்பொருட்காட்சியில் வருவாய் துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை,வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை,மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை,தோட்டக்கலைத்துறை, பொதுப் பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுற்றுலாத்துறை,போக்குவரத்துத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,செய்தி மக்கள் தொடர்புத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை,பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,மீன் வளத்துறை ஆகிய அரசு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோயம்புத்தூர் மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கோ-ஆப்டெக்ஸ், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்கப்படவுள்ளன. மேலும், இந்தஅரசுபொருட்காட்சி அரசு துறைகளின் அரங்குகள் மட்டுமின்றி கோடை காலத்தை பொதுமக்கள் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோகப்பொருட்களுடன்கூடிய பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது.தினமும் தங்கள் துறை அரங்குகளை பார்வையிடும் பொதுமக்களுக்கு அரங்கு பற்றி விவரித்துக் எடுத்து சொல்வதற்கு, சுழற்சிமுறையில் அலுவலர்களையும்,சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூடுதல் பணியாளர்களையும் நியமிக்கவேண்டும். இப்பொருட்காட்சியானது தினசரி மாலை 4மணி முதல் இரவு 10மணி வரை நடைபெறவுள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்பான முறையில் அரங்குகளை அமைக்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை வடக்கு தமிழக குரல் செய்தியாளர் சுதன்
No comments:
Post a Comment