தமிழ் கடவுளான முருகப் பெருமானை வணங்க ஸ்ரீ விநாயகப் பெருமானாக வணங்கக்கூடிய யானைகள் கூட்டம் மருதமலை படிக்கட்டில் முகாமிட்டதால் பக்தர்கள் பதற்றத்துடன் பக்தி முழக்கமிட்டனர்... - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 15 April 2024

தமிழ் கடவுளான முருகப் பெருமானை வணங்க ஸ்ரீ விநாயகப் பெருமானாக வணங்கக்கூடிய யானைகள் கூட்டம் மருதமலை படிக்கட்டில் முகாமிட்டதால் பக்தர்கள் பதற்றத்துடன் பக்தி முழக்கமிட்டனர்...


 தமிழ் கடவுளான முருகப் பெருமானை வணங்க ஸ்ரீ விநாயகப் பெருமானாக வணங்கக்கூடிய யானைகள் கூட்டம் மருதமலை படிக்கட்டில் முகாமிட்டதால் பக்தர்கள் பதற்றத்துடன் பக்தி முழக்கமிட்டனர்...



கோவை மருதமலை தமிழ் கடவுளான ஸ்ரீ முருகன் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை ஒட்டி ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மருதமலை வருவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பக்தர்களுடன் சேர்ந்து  ஸ்ரீ விநாயகப் பெருமானாக வணங்கக்கூடிய  14 யானைகள் கொண்ட கூட்டமும் சேர்ந்து மருதமலை படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்ததால் பக்தர்கள் பதற்றம் அடைந்தனர் இதனால் அங்கு 2 மணி நேரத்திற்கு மேலாக  படிக்கட்டு வழியாகவும், மலை பாதை வழியாகவும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது அந்த சமயத்தில் பக்தர்கள் மிரண்டு போனாலும் ஸ்ரீ முருக பெருமானை வணங்க ஸ்ரீ விநாயகப் பெருமானாக வணங்கக்கூடிய யானைகள் கூட்டம் அங்கிருந்ததைக் கண்டு பக்தி பரவசத்துடன் கணேச கணேசா என்று பக்தி முலக்குமிட்டனர்... 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழகக் குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad