கோயம்புத்தூர் 17, கோவைப்புதூர் வி.எல்.பி ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாய் தமிழ் அகாடமி, மக்கள் ஊடக மையம் மற்றும் மதிமுகம் தொலைக்காட்சி இணைந்து நம்ம ஊரு நட்சத்திரம் என்ற மாபெரும் விருது வழங்கும் விழா இன்று (17-03-2024) நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் சதீஷ்குமார் அவர்கள் தலைமை தாங்க,கமுதி பேராசிரியர் பால்பாண்டி அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னதாக தாய் தமிழ் அகாடமி நிறுவனர் பால்ராசு அனைவரையும் வரவேற்க, மக்கள் ஊடக மைய ஒருங்கிணைப்பாளர் சித்ரவேல் விழா பேருரை ஆற்றினார். இதில் வால்பாறை கணித ஆசிரியர் வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருது பெற்றவர்களுக்கு விருதினை வழங்கி வாழ்த்துரை ஆற்றினார். இவரது கல்வி சேவையை பாராட்டி கல்லூரியின் முதல்வர் சதீஷ்குமார் மற்றும் விஜய் டிவி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு புகழ் நாகமுத்து பாண்டியன் ஆகியோர் இணைந்து சிறப்பு விருந்தினர்க்கான நம்ம ஊரு நட்சத்திரம் என்ற விருதினை வழங்கி சிறப்பித்தனர். இறுதியில் நாகமுத்து பாண்டியனின் எல்லாம் நன்மைக்கே என்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை விருந்து நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள், செவிலியர்கள், சமூக சேவகர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விருது பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment