விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் பகுதியில் தனது பாடல் திறமையால் தனித்துவத்தில் தமக்கு சொந்தம் ஆக்கிய ஸ்ரீநிதா என்பவர் ஒரு பள்ளி மாணவி அதிலும் குறிப்பாக நமது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆசிரியர் காலனி பகுதியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...
வெற்றிவாகை சூடிய ஸ்ரீநிதா இன்று நமது மத்திய இணை அமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அவருடன் அவர்களது பெற்றோர்களும் உடன் இருந்தனர் வெற்றி பெற்ற ஸ்ரீநிதா மத்தியான இணை அமைச்சர் திரு எல்.முருகன் அவர்களின் அலுவலகத்தில் அவர்களின் முன்னாள் ஒரு பாடலை பாடி பாராட்டு பெற்றார் மேலும் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்...
அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நமது கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்...
கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment