நமது காரமடை நகராட்சி 9 வது வார்டு காந்தி நகர் ரயில்வே பாலம் சேறும் சகதியும் கண்டு கொள்வார்களா நகராட்சி நிர்வாகம் அல்லது தமிழக அரசு பொறுத்திருந்து பார்ப்போம் மக்களின் கேள்விகள்? பயணிப்போர் கடந்து செல்லவே அஞ்சும் நிலை-அச்சுறுத்தும் சாலை ரெயில்வே பாலம் அருகே எப்போது தான் விடிவு பிறக்குமோ❓*
நமது காந்தி நகரில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் அடியில் அமைந்துள்ள பாதையானது நீர் தேங்கி குண்டும் குழியுமாய் சேறும் சகதியுமாய் மக்கள் கடந்து செல்லவே அச்சுறுத்தலாக உள்ளது.
நமது ரயில்வே பாலத்திற்கு மேற்கே காமராஜ் நகர்,பாரதி எஸ்டேட்ஸ் போலவே பல குடியிருப்புகள் உருவாகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த சாலையை பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் சீரமைக்காத அவலநிலை தொடர்ந்து வருகிறது.
அந்த குறிப்பிட்ட பகுதியில் பேவர் பிளாக் அமைத்து தர வேண்டும் என கடந்த காலங்களில் MP, MLA, EO , ஆணையாளர் மற்றும் வார்டு கவுன்சிலர் , நகர மன்ற தலைவர் , நகர சபை கூட்டங்கள் என பொதுமக்கள் சார்பில் 2019 முதல் தொடர்ந்து கோரிக்கையை தவறாமல் முன் வைத்தே வந்துள்ளோம்.ஆனால் நமது கோரிக்கையும் சரி அந்த இடமும் சரி உரிய தீர்வு காணப்படாத கிடப்பிலேயே இன்று வரை இருந்து வருகிறது. மழை வந்தால் போதும் சேறும் சகதியுமாய் மாறி பிரச்சினை
தமிழக குரல் இணையதள கோவை மாவட்ட செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவ...
No comments:
Post a Comment