கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 37 பேருந்துகள் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறையில் இருந்து வெள்ளமலை எஸ்டேட் பகுதிக்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இன்று இந்த பேரூந்தை ஒட்டுனர் வெங்கடேசன் இயக்கி வந்தார். பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு மீதமுள்ள 15ற்கும் மேற்பட்ட பயனிகளுடன் வால்பாறை நோக்கி பேருந்து சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து கூலங்கல் ஆற்றின் அருகில் உள்ள வளைவில் சென்ற போது பேருந்து டீசல் டேங்கில் இருந்து எஞ்சினுக்கு செல்லும் டீசல் tube கட் ஆகி டீசல் சாலையில் வழிந்தோடி சென்றது.இந்தநிலையில் பேரூந்து வளைவில் திரும்பியபோது பிரேக் மிதித்த போது பிரேக் பிடிக்காமல் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு வேலியில் மோதி தேயிலை தோட்டத்தின் பள்ளத்தில் செங்குத்தாக தரையில் மோதி நின்றது.. இந்த விபத்தில் சிலருக்கு சிறு சிறு ஊமைக்காயங்கள் ஏற்பட்டன. பயணிகள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment