கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (20.11.2023) நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் "இதழாளர் கலைஞர்" சிறப்பிதழை மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழுத் தலைவர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு இணைத் தலைவர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக்குழு இணைத் தலைவர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள், ஆகியோர் முன்னிலையில், கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்கள் தலைமையில் கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர்.ஜி.பக்தவத்சலம் அவர்கள் வெளியிட, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் செயலர் திருமதி.சரசுவதி கண்ணையன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அருகில் செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் / இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர் செயலர் திருதமோகன், இ.ஆப, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment