கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் என் மண் எண் மக்கள் பாதயாத்திரைக்கு இன்றைய தினத்தில் மேட்டுப்பாளையம் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார் இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு மேட்டுப்பாளையம் பாரதிய ஜனதா கட்சியினர் அவருக்கு மேளதாளங்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்...
இந்த கூட்டத்தில் ஏராளமான கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி இந்த பாதயாத்திரையை காண பொதுமக்களும் குவிந்ததால் இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர் மேலும் இந்த சமயத்தில் பலத்த காவல் பாதுகாப்பும் காவல்துறையினரால் வழங்கப்பட்டிருந்தது இந்த பாதயாத்திரையானது மேட்டுப்பாளையம் கோட்டையூரில் துவங்கி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வரை நடந்தது இதில் அண்ணாமலை அவர்கள் கூறும் பொழுது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற முறையில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் அவரது உரையின் பொழுது மத்திய அரசின் சாதனைகளையும் திமுக அரசின் வேதனைகளையும் பட்டியலிட்டு கூறியிருந்தார் இந்தியா கூட்டணியானது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி எனவும் கூறி இருந்தார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment