கோவை காஸ்மோபாலிடன் கிளப்பிலும், ஆலாந்துறையில் உள்ள செலிப்பிரிடி ரிசார்ட்டிலும் மூன்று நாள் நிகழ்வாக அவர்களுடைய ஆசிரியர்களை அழைத்து மரியாதை செய்து தோழமை கூட்டம் - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 16 October 2023

கோவை காஸ்மோபாலிடன் கிளப்பிலும், ஆலாந்துறையில் உள்ள செலிப்பிரிடி ரிசார்ட்டிலும் மூன்று நாள் நிகழ்வாக அவர்களுடைய ஆசிரியர்களை அழைத்து மரியாதை செய்து தோழமை கூட்டம்

 


கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப  கல்லூரி MBA 1983 ம் வருடம் படித்து முடித்து முதுகலை பட்டம் பெற்ற முன்னாள்  மாணவர்கள் அவர்களது 40 வது வருட நினைவாக 20 மாணவர்கள் அவர்களது குடும்பத்துடன்  கோவை காஸ்மோபாலிடன் கிளப்பிலும்,  ஆலாந்துறையில் உள்ள செலிப்பிரிடி ரிசார்ட்டிலும் மூன்று நாள் நிகழ்வாக  அவர்களுடைய ஆசிரியர்களை அழைத்து மரியாதை செய்து தோழமை கூட்டம் நடத்தி மற்றும் விருந்து எற்பாடு செய்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.  அந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாட்டில் உள்ள அவர்களுடைய சக மாணவர்களுடன் zoom ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் கலந்துரையாடினார்கள். மேலும்  ரிசார்ட்டில் தங்கிய பொழுது அவர்களது பழைய கல்லூரி நினைவுகள் மற்றும் குடும்ப தொழில் பற்றிய தகவல்களை பற்றி பரிமாறி மகிழ்ந்தார்கள். இந்த 3 நாள் நிகழ்ச்சிகளும் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மன நிறைவான நிகழ்வாக நடத்த ஏற்பாடுகளை  ரமேஸ்குமார், பழனிச்சாமி, கிருஷ்ணகுமார், கிளமண்ட் அசோக்,  சேகர்,  சுப்பிரமணியன் , சீனிவாசன் ஆகிய முன்னாள்  மாணவர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தி,  சக மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் டி சர்ட்டுகளை வழங்கி, பட்டாசுகள் வெடித்தும் விழாவை நிறைவு செய்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad