கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி காப்பீட்டு திட்ட பயனாளிக்கு இறப்புக்குப் பின்பு இரண்டு லட்சம் வழங்கப்பட்டது
இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும், குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் 2015ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற காப்பீட்டு திட்டத்தை கொண்டுவந்தது, 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். அதிகபட்சம் 50 வயதில் இத்திட்டம் முதிர்வடைந்து விடும்
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் பயன்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
மத்திய அரசின் இந்த காப்பீட்டு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கக் கூடியதாகும். முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்படும்.
முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். பாலிசி காலத்திலேயே பாலிசிதாரருக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு கிடைக்கும்.
இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகை
ரூ.436 மட்டுமே
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் இணைந்த ஒருவர் திடீரென இறந்துவிட்டால்,
அவரது உரிமை கோறுகின்றவர் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்,
சான்றுகள் சரிபார்ப்பு முடிந்தபின்னர் காப்பீட்டுப் பணம் வங்கிக் கணக்கில் வந்துவிடும். இதற்கு 30 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும்.
மத்திய அரசின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீட்டு திட்டத்தின் பயனாளியான மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் வயது 33
கடந்த மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டதால் அவரது தாயார் பழனியம்மாள் உரிமை கோறுகின்றவர் காப்பீட்டு திட்டத்தின் பயனுக்காக வங்கிக்குச் சென்று விண்ணப்பித்திருந்தார்
மேட்டுப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கியில் முதன்மை மேலாளர் வனிதா நடராஜன் இடம் இத்திட்டத்தின் அனைத்து நகல்களையும் சமர்ப்பித்த பின்பு முதன்மை மேலாளர் வனிதா நடராஜன் நகல்களை சரிபார்த்த பின்பு சரவணகுமார் அவரது தாயார் பழனியம்மாள்லிடம்
பணம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் வனிதா நடராஜன், பரிவர்த்தனை மேலாளர் நித்தியா, மூத்த அலுவலர்கள் ஜெயச்சந்திரன்,
கலாமணி, பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் முனியப்பன், சரோஜா,பணியாளர் சதன்யா ஆகியோர் உடன் இருந்தனர்
காப்பீட்டு திட்ட பயனாளியின் குடும்பத்தாருக்கு காப்பீட்டு திட்டத்தின் நகல்களை சரி பார்த்து தொகையை
உரிய நேரத்தில் வழங்கியதற்காக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் வனிதா நடராஜன் மற்றும், அலுவலர்களை பாராட்டினர்
இத்திட்டத்தின் பயன்களை குறித்து பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் வனிதா நடராஜன் வாடிக்கையாளர்களிடம் விவரித்துக் கூறினார் மேலும் பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதிஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment