முத்தமிழ் அறிஞர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர், சூலூர் மண்ணின் மைந்தன் எஸ்.எஸ். - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 16 October 2023

முத்தமிழ் அறிஞர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர், சூலூர் மண்ணின் மைந்தன் எஸ்.எஸ்.

 


முத்தமிழ் அறிஞர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர், சூலூர் மண்ணின் மைந்தன் எஸ்.எஸ். 



பொன்முடியின் 11வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சூலூர் பேரூர் கழக திராவிட முன்னேற்ற கழகம், கோவை தெற்கு மாவட்ட  கழக மருத்துவர் அணி சார்பாக,  ஐ பவுண்டேஷன், சூலூர் எல்.ஜி பல்நோக்கு மருத்துவமனை, ராவ் மருத்துவமனை, சிங்காநல்லூர் என்.ஜி. மருத்துவமனை மற்றும் கார்டியாக் மையம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச பன்நோக்கு மருத்துவ முகாம் சூலூர் கலங்கல் சாலையில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபத்தில், கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் த.மன்னவன் முன்னிலையில், முகாம்  ஒருங்கிணைப்பாளர்கள் தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் சிவப்பிரகாசம், சூலூர் நகர கழக செயலாளர் உரம் கௌதமன் ஏற்பாட்டில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.. நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர் சோலை கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பசுமை விஜயகுமார், மேகநாதன், கண்ணம்பாளையம் நகர கழக துணை செயலாளர் பசுபதி, கலங்கல் ஊராட்சி கழக செயலாளர் கலங்கல் சிவகுமார், கழக நிர்வாகிகள் சூலூர் ஜெகநாதன், சூலூர் செல்வராஜ், கண்ணம்பாளையம் ராஜகோபால் மற்றும் திரளான கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. மேலும் நிகழ்வில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி வெற்றி சந்தோஷ் சார்பில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி , விடுபட்ட மகளிருக்கு,  கலைஞர் உரிமை தொகை கிடைக்கும் வகையில், அந்த தொகை பெற்றுக் கொள்வதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad