தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வைர விழா ஆண்டு வட்ட மாநாடு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் நடைபெற்றது - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 14 October 2023

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வைர விழா ஆண்டு வட்ட மாநாடு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் நடைபெற்றது


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வைர விழா ஆண்டு வட்ட மாநாடு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் நடைபெற்றது


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைர விழா ஆண்டு வட்ட மாநாடு  எழுச்சியாக நடைபெற்றது 


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது, சங்கத்தின் கொடியை மாவட்ட செயலாளர்  பவதாரணி ஏற்றி வைத்தார் சிறப்பாக பணியாற்றி மரித்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி மாநாட்டு மேடைக்கு ஊர்வலம் சென்றனர்,


 இந்நிகழ்ச்சிக்கு  தனபால் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார் வெங்கடாசலம் முன்னிலையில், புவனேஷ் வரவேற்புரை ஆற்றினார், அஞ்சலி  தீர்மானம் சரோஜினி தேவி நிறைவேற்றினர்,


வேலை அறிக்கையை பவதாரணியும் பொருளாளர் அறிக்கையை சிவ சக்தியும் வாசித்தனர், எழுச்சியாக நடைபெற்ற வட்ட மாநாட்டில் இந்திய பொதுத் தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள்,

 

இந்திய தபால் துறை ஊழியர் சங்க பொறுப்பாளர், அகில இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன தொழிற்சங்க பொறுப்பாளர்கள், நகராட்சி துறை பொறியாளர் சங்க பொறுப்பாளர்கள், 


ஆட்டோ ஓட்டுனர் சங்க பொறுப்பாளர்கள், சாலையோர வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள், மற்றும் உடற்கட்டு பயிற்சியாளர் சங்க பொறுப்பாளர்  உள்ளிட்ட தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்ந்திட வைர விழா மாநாடு மிகச் சிறப்பாய் நடைபெற்றது


 இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றஇந்திய தபால் துறை ஊழியர் சங்க பொறுப்பாளர் பேசுகையில் நமது சுயமரியாதை காப்பாற்றிக் கொள்ளவும், உரிமைகளை பாதுகாக்கவும் நமது தோழர்கள் பலர் இன்னுயிர் ஈந்தனர் அதன் ஒரு பகுதியாகவே நாம் இன்று மரியாதையுடன் நடத்தப்படுகிறோம் சங்கங்கள் இல்லை என்றால் நம்மால் அலுவலகங்களில் அமர்ந்து பணி செய்ய இயலாது போய்விடும், நமது பல கட்டமான போராட்டங்களின் மூலம் நாம் அநேக வெற்றிகளை பெற்றிருக்கிறோம் என்று கூறினார்.


 அகில இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன தொழிற்சங்க பொறுப்பாளர் பாலன் பேசுகையில் ஒற்றுமையுடன் செயல்படுவோம் சங்கங்களின் வளர்ச்சி பணிக்கு இணைந்து செயல்படுவோம் என்று கூறினார்


எழுச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையம் சிஐடியு (CITU) பொது தொழிலாளர் சங்க செயலாளர் பாஷா வாழ்த்துரை கூறினார் வாழ்த்துறையில் 


வருவாய்த்துறையில் மூத்ததும், நிலைத்து நிற்பதும், நேர்மையாக, தூய்மையாக வைர விழா ஆண்டினை கண்டது  தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் என்றால் அது மிகையாகாது.


வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் பொது சங்ககளுக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும், போராட்டங்களில் முன்னிலையில் இருந்தும், துறைக் கோரிக்கைகளுக்கான போராட்டமாக இருந்தாலும், பொதுக் கோரிக்கைகளுக்கான போராட்டமாக இருந்தாலும் தலைமையேற்று வெற்றிகளை பெற்றுதந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள்.


பெற்றதெல்லாம் சலுகைகள் அல்ல. தானாக அவைகள் கிடைத்ததும் அல்ல. போராடி பெற்ற மனித உரிமைகள். இன்னும் கூட எட்டாத உயரத்தில் இருப்பதாகத் தோன்றும் உரிமைகளும் தட்டிப் பறிக்க கூடாதது இல்ல. காலத்தால் வளர்க்கப்படும் கனவுகள் கனிந்து கைகெட்டும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.


இச்சாதனைகளையெல்லாம், ஒரு தனி மனிதரால் ஒர் குழுவினால் ஒரு சிலரால் மட்டுமே சாதித்திருக்க முடியுமா? இல்லை நிச்சயம் இல்லை.


எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அண்டிபிழைக்காமல் உரிமைகளுக்காக கோரிக்கைகளுக்காக மாநிலம் முழுவதுமுள்ள நம் பேரிக்கத்தின் அத்தனை அங்கத்தினர்களின் கட்டுக் கோப்பான கடுமையான நடவடிக்கையினால் மட்டுமே முடிந்தது என்பதுதான் உண்மை. கோரிக்கைகள் வென்றிட நம் இயக்க முன்னோடிகள் தண்டனைகளைத் தாங்கிக் கடந்து வந்த காட்டாறுகள்,


 நீந்தி வந்த நெருப்பாறுகளை சொல்லி முடியாதெனில் இவற்றில் நமது பங்கு என்னவாக இருந்தது? என எண்ணிப்பாருங்கள் பெருமைபடுங்கள்


நமக்கென்ன? நாம் ஈடுபட்டா நடக்கப் போகிறது? யாரோ சிலர் இருக்கிறார்கள் என்றெல்லாம் மற்றவர்கள் கடந்த காலங்களில் விட்டுயிருந்தால் நமது நிலை எதுவாக இருந்திருக்கும் என்றும் எண்ணிப்பாருங்கள் அப்போதுதான் கூட்டு முயற்சி கூட்டுச்செயல், கூட்டுப்போராட்ட என்ற சங்க நடைமுறைகளின் அடிப்படை அம்சம் தெளிவாக தெரியும்


உரிமைகள் மறுக்கப்படும் போதும் நியாயங்கள் அழிக்கப்படுகின்ற போதும் கடந்த காலங்களைப் போலவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், போனாலும், எங்கள் நிலை உறுதியானது கட்டுக்கோப்பானது என சொல்லி ஒருங்கிணைந்த சங்க நடவடிக்கைகள் மூலம் மட்டுமே உரிமைகளை நியாயங்களையும் நிலை நிறுத்த முடியும் என்ற சமூக விஞ்ஞானத்தின் சட்டத்தினை உணர்ந்திடுவோம் இதில் யாரும் எதுவும் எந்த நிலையிலும் வேறுபட முடியாது எனவே தோழமையுடன் செயல்படுவோம் என்று உரைத்தார்


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் நிறைவுறையாற்றினார் அதில் அவர் கூறியதாவது இனி குறைகளே இல்லையா? அடைந்த சாதனைகள் போதுமா, இன்னுமும் நம் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேலைப்பளுக் கொடுமைகளிலிருந்து விடுபட, அவ்வப்போது நம்மைத் தாக்கும் அடிமைச் சட்டங்களின் பாதிப்பிலிருந்தும் நமது எதிர்காலத்தினை கேள்விக் குறியாகமாற்றி அவ்வப்போது பிறக்கும் கறுப்பு சட்டங்களின் கோரப்பிடியிலிந்து விடுபட சங்க நடவடிக்கை என்பது என்றுமே ஓர் தொடர்கதையும் வெற்றிப்பாதையுமே


உரிமைகள் மறுக்கப்படும் போதும் நியாயங்கள் அழிக்கப்படுகின்ற போதும், கடந்த காலங்களைப் போலவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் -போனாலும் எங்கள் நிலை உறுதியானது, கட்டுக் கோப்பானது எனச்சொல்லி கடுமையான ஒருங்கினைந்த சங்க நடவடிக்கைகள் மூலம் மட்டுமே உரிமைகளை நியாயங்களை நிலை நிறுத்த முடியும் என்ற சமூக விஞ்ஞானத்தின் சட்டத்தினை உணர்ந்திடுவோம், இதில் யாரும் எதுவும் எந்த நிலைகளிலும் வேறுபடமுடியாது.


இந்த கோட்பாடுகளின் - கொள்கைகளின் வழியில் சாதி, மத, இன, கட்சி, அரசியல் வேறுபாடுகளை தவிடு பொடியாக்கி நமது பேரியக்கம் தொடர்ந்து போடும் வீரு நடையில் தங்கள் பங்கு என்ன? இந்த கட்டாய கடமையில் தங்கள் சிந்தனை எழுச்சி சீரிய பங்கு எதுவாக இருக்க வேண்டுமென முடிவெடுப்போம் செயலாற்றுவோம்.


வருவாய்த்துறையில் பணியாற்றுபவர்கள் வேறு எந்த துறைகளிலும் இல்லாதவாறு பணியாற்றுகின்றனர் அவைகள் வட்டாட்சியர் 56 வகையான பணிகள், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் 17 வகையான பணிகள்,

 மண்டல துணை வட்டாட்சியர்கள் 56 வகையான பணிகள் ,

சரக வருவாய் ஆய்வர்கள் 27 வகையான பணிகள் ஆகியவற்றை பார்த்து வருவதுடன்,

நில அளவை பயிற்சி, காவல் துறை பயிற்சி மற்றும் நீதித்துறை பயிற்சி பெற்று, மற்ற துறைகளிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட நிலையில் பணியாற்றி வருகின்றோம்.


சங்கத்தை உடைப்பது உள்ளிட்ட அரசின் சதி திட்டங்களை முறியடித்து, ஜாதி மதங்களை பாரோம், குலத்தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம், என்ற அடிப்படையிலும் அனைத்து நிலை ஊழியர்களையும் மதித்து ஒருங்கிணைந்து நாம் பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் நடத்தி உயிரிழந்து பெற்ற உரிமைகளாகும்.


நாம் பெற்ற வெற்றிகள் ஏதோ ஒரு தனி மனிதனால் சாதிக்கப் பட்டவைகள் அல்ல தோழமை சங்கம் என்ற ஒற்றுமை பதாகையை உயர்த்திப் பிடித்து ஒவ்வொரு முடிவுகளையும் மாநில நிர்வாகிகள் கூடிப்பேசி விவாதித்து இறுதிப்படுத்தி,


 நமது சங்கத்தின் உயர்ந்தபட்ச அமைப்பான மத்திய செயற்குழுவில் உரிய காலத்தில் கூடி விவாதித்து முடிவெடுத்து முழுவதுமாக அமுல்படுத்தியன் விளைவாக சங்கத்தின் வலிமையை ஆட்சியாளர்கள் பலமுறை உணர்ந்ததன் மூலம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் வைத்து அரசின் திட்டங்கள் செம்மையாக மக்களுக்கு சென்றடைய கால நேரமின்றி செயல்படுத்தியதின் விளைவே,

 

இதன் வளர்ச்சி கடந்த கால வேலை நிறுத்த போராட்டத்தில் நாம் பெற்றிருக்கிற படிப்பினையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் நமது ஊழியர்களை அணுகுமாறு அன்போடு பேசி அவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைத்து மக்களை நோக்கி செல்ல வேண்டும், என்ற வேண்டுகோளை முன்வைத்து போராடும் அனைவரோடும் சேர்ந்து போராடுவோம்; வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்து உங்கள் ஆக்கபூர்வமான விவாதங்களை எதிர்நோக்கி நிறைவு செய்கிறேன் என்றார்


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்தார் இளநிலை உதவியாளரை, இளநிலை வருவாய் ஆய்வர் என்றும், உதவியாளரை முதுநிலை வருவாய் ஆய்வர் என்றும் பெயர் மாற்றம் செய்திடக் கேட்டல். கால அவகாசம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை உடன் வழங்கிட கோருதல்...


வாக்காளர் பட்டியல் பராமரிப்புப் பணிக்கு துணைவட்டாட்சியர் நிலையில் நிரந்தர பணியிடங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும் 


ஆண்டுதோறும் துணை ஆட்சியர் பட்டியல் வெளியிடக் கோருதல், பறிக்கப்பட்ட பழைய ஓய்வூதியப்பலங்களை திரும்ப பெற கோருதல். சரண்விடுப்பு, அகவிலைப்படி ஆகியவற்றை திரும்ப வழங்கிடக் கோருதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதைப் போல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க கோருதல் ஆகிய பொது கோரிக்கைகளுக்காகவும். வருவாய்த்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தடையாக உள்ள அரசானை எண் 212 (ப (ம) நி.சீ.துறை) லிருந்து வருவாய்த்துறைக்கு விலக்களிக்க கேட்டல். ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு பரிந்துரை செய்த ஏ.எம்.சாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை கைவிட கேட்டல்.


நாம் ஒரே மனிதராக கரம் சேர்த்து செயலாற்ற வேண்டிய தருணம் இது. நமது கோரிக்கைகளை  வென்றெடுக்க போராட்டம் தான் வழி என்றால் அத்தகைய போராட்டத்தில் ஈடுபட நம்மை நாம் தயார் படுத்திக்கொள்வோம் என்றார்


முந்தைய நிர்வாகிகளின் செயல்பாடுகளை குறித்து விவாதிக்கப்பட்டு அதன் நிறை குறைகளை களைந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது நிர்வாகிகளின் பெயர்கள் பவதாரணி வட்டத் தலைவர், சரோஜா தேவி, சண்முகப்பிரியா,              ஆனந்த் குமார் ஆகியோர் துணைத் தலைவர்கள், புவனேஷ் வட்டச் செயலாளர், உமா மகேஸ்வரி, பூங்கொடி, துளசிமணி ஆகியோர் துணை வட்டச் செயலாளர், சிவசக்தி வட்ட பொருளாளர், குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு தோழமை சங்கத்தினர் வாழ்த்து கூறினர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதிஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad