அம்மா மக்கள் முன்னேற்ற கழகம பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க , கோவை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட நிகழ்வு, தாமரைக் குளம் பகுதியில், கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர், கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர், முன்னாள் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே சுகுமார் தலைமையில் நடைபெற்றது. கிணத்துக்கடவு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.விஜய காளிமுத்து, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.ஆர்.வினிஷ் ஆகியோர் வரவேற்புரை வழங்க, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நாசர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் தாமரை மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தேவராஜ், கோவில்பாளையம் ஊராட்சி செயலாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி தலைவர் தாமரை ரகுபதி முன்னிலை வகித்தனர். கழகத் துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் உடுமலை சி.சண்முகவேலு, தலைமைக் கழக பேச்சாளர் திருப்பூர் ஆசிக், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.ப.ரோகிணி கிருஷ்ணகுமார், இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை பொருளாளர் சி.டி.சி கருணாகரன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்... நிகழ்வில் மாவட்ட கழக அவைத் தலைவர் சிவகுமார், மாவட்ட கழக துணை செயலாளர்கள் மேனகா மோகனசுந்தரம், சுந்தரவடிவேல், மாவட்ட கழக பொருளாளர் சரவண முத்துக்குமார், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.ஆறுமுகம், அன்பு செல்வன், ஒன்றிய கழக செயலாளர்கள் சேரன் பாலு, முனைவர் அ.ராஜாராம்,
கே.ஏ.ஏகநாத மூர்த்தி, ஆறுச்சாமி, நகர கழக செயலாளர்கள் சி.டி.சி. முத்துக்குமார், வால்பாறை நெல்லை செல்வம், மாநில தோட்ட தொழிலாளர் நலப் பிரிவு இணை செயலாளர் பாபுஜி, மாவட்ட சார்பணி செயலாளர்கள் அம்மா பேரவை எம்.எஸ்.கே. முத்துக்குமார், இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு மாவட்ட செயலாளர் ஆச்சி பட்டி வெங்கடேஷ் குமார், மாவட்ட தலைவர் நெக்சன் செல்வம், மாவட்ட பொருளாளர் குணசேகரன், அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர்
எம்.ஆனந்தகுமார், கோவை போக்குவரத்து மண்டல செயலாளர் மோகனசுந்தரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு (பெண்கள்) செயலாளர் மலர்க்கொடி, பேரூராட்சி செயலாளர்கள் உலக நம்பிநாதன் அப்துல் கையூம், சிவசாமி, ஆர்.எஸ். புரம் பகுதி கழக செயலாளர் ரங்கராஜ், கே.எம்.ஏ.சின்னப்பா, அதிமுக ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த குறிச்சி மணிமாறன், மனோகரன் மற்றும் திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்... இறுதியில் செட்டியக்காபாளையம் ஊராட்சி செயலாளர் மருதாசலம் நன்றி தெரிவித்தார்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment