கல்வியும் சுகாதாரமும் தனது இரு கண்களாக கொண்டு நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சி - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 30 September 2023

கல்வியும் சுகாதாரமும் தனது இரு கண்களாக கொண்டு நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சி


கல்வியும் சுகாதாரமும் தனது இரு கண்களாக கொண்டு நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியில் சமூக மருத்துவர்கள் பெரியார்,அண்ணா, கலைஞர் வழியில் இந்திய ஒன்றியத்தின் ஆற்றல்மிகு முதல்வர்  தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு முத்தமிழறிஞர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் கழக முப்பெரும் விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சூலூர் வடக்கு ஒன்றிய திமுக சூலூர் எல்.ஜி. மருத்துவ மையம் லோட்டஸ் கண் மருத்துவமனை ஆர்.வி.எஸ் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பூர் ரேவதி மருத்துவ மையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச  பண்ணோக்கு மரு‌த்துவ முகாம், கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் அரசூர் தொடக்கப்பள்ளியில் 



கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில், கழக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர் மரு.கோகுல் கிருபா சங்கர் முன்னிலையில், சூலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்  அ.வெ.அன்பரசு முகாமை தொடங்கி வைத்தார். இதில் அரசூர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அ.வெ.கோவிந்தராஜ்,  அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் அ.வெ.கோ. மனோன்மணி, ஊராட்சி கவுன்சிலர் அ.வெ.அ. செல்வநாயகி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 15 துறை சார் மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.இந்த முகாமில் இ.சி.ஜி.145 பேருக்கும், எக்கோ 65 பேருக்கும், கண் சிகிச்சை 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு அதில் 34 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் பி.எம்.டி.76 பேருக்கும், பி.எப்.டி 58 பேருக்கும், பி.எம்.ஐ & கொழுப்பு சத்து 260 பேருக்கும், மகளீர் மருத்துவம் 138 பேருக்கும் குழந்தைகள் நலன் & ஊட்டச்சத்து ஆலோசனை 86 பேருக்கும், மன நல ஆலோசனை 24 பேருக்கும், பல் மருத்துவ சிகிச்சை 175 பேருக்கும், இரத்த சக்கரை பரிசோதனை 350 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டது. 



நிகழ்வில் முகாம் ஒருங்கிணைப்பாளர் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் கே.சிவப்பிரகாசம், சூலூர் தொகுதி துணை அமைப்பாளர் மருத்துவர் ஜோ. பெரியார் செல்வி, மாவட்ட துணைத் தலைவர் மருத்துவர் ஸ்வேதா, மாவட்ட துணை அமைப்பாளர் மருத்துவர் சரவணன், கிணத்துக்கடவு தொகுதி அமைப்பாளர் மருத்துவர் சுகன்யா, கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் நந்தகோபால், சூலூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன், அரசூர் ஊராட்சி துணை தலைவர் சுதா, கார்க்கி மற்றும் திரளான கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad