கோவை நீலாம்பூர் பகுதியில் அமைந்துள்ள கதிர் பொறியியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான அறிமுக விழா கல்லூரியில் உள்ள கலையரங்கில் கல்லூரி நிறுவனத் தலைவர் இ.எஸ்.கதிர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் கல்லூரி செயலாளர் திருமதி லாவண்யா கதிர் குத்துவிளக்கு ஏற்றி வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், மனித வள மேம்பாட்டு திறன் பயிற்சியாளர் மற்றும் பத்திரிக்கையாளர் மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு அரங்கில் கூடியிருந்த மாணவ மாணவியரிடையே, பிரபலமான இந்த கல்லூரியில் இடம் கிடைத்து படிக்க வந்திருக்கும் நீங்கள் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில்
தாங்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய, கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் உதயகுமார், துணை முதல்வர் பானுமதி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கற்பகம் ,துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ,மாணவ மாணவியர் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment