கோவை: விற்பனை அதிகமாக இருக்கும் நேரமான மாலை 5 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 19 September 2023

கோவை: விற்பனை அதிகமாக இருக்கும் நேரமான மாலை 5 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: விற்பனை அதிகமாக இருக்கும் நேரமான மாலை 5 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



இதுகுறித்து அனைத்து கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக்நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:



மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள், மதுபானம்,பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்படுவார். மேலும், கூடுதல் விலை விற்பனை செய்வதைதடுக்கத் தவறிய, கடை மேற்பார்வையாளர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.



அதேபோல, கடை விற்பனை மேற்பார்வையாளர், மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணி வரை பணியில்இருக்க வேண்டும். குறிப்பாக, அதிக விற்பனை நேரமான மாலை 5முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் கட்டாயம் கடையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், முதல்முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.



இரண்டாவது முறையும் கடையில் இல்லையென்றால், மேற்பார்வையாளர்கள் குறைவான விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதிஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad