சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கான நினைவாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது
விழாவிற்கு பள்ளி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி மாணவர் தலைவராக கோகுல் மற்றும் மோனிகா ஸ்ரீ, உதவி தலைவராக யோகேஸ்வரன் , திவ்யா, மற்றும் விளையாட்டு குழு தலைவர்களாக ஸ்ரீசாந்த் ,கீர்த்தனா, துணைத் தலைவர்களாக கிரிதரன், சாஜிதா, மற்றும் அணி தலைவர்களாக விஷ்வா ,சக்தி ,ரஞ்சித் குமார், யாழினி, விஷால், ஹரிணி, மௌரிஸ் ஆண்டனி, சாய் ஜனனி, என். எஸ் .எஸ் தலைவராக ஜஸ்வந்த் , மேகவர்ஷினி கல்ச்சுரல் நிர்வாகிகளாக குரு பிரசாந்த் ,நந்தனா மற்றும் உதவி தலைவர்கள் பதவி ஏற்றனர்.
விழாவில்
சென்னை குளோபல் சட்ட அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழக மாநில செயலாளருமான வக்கீல் சரவணா அரவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நினைவாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை வழங்கினார்
நிகழ்ச்சியில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் தலைவர் தம்பு மற்றும் சங்க நிர்வாகிகள் சிறுமுகை ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment