அப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்...
சூலூர் ஏர்விங்ஸ் லயன்ஸ் கிளப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மருத்துவர் ராஜேந்திரன் டயாபட்டீஸ் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம், சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச சிறப்பு கண் விழித்திரை பரிசோதனை முகாம், கோவை தெற்கு மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம், அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன், சுல்தான்பேட்டை ஒன்றிய அவைத்தலைவர் அப்பநாயக்கன்பட்டி ராஜேந்திரன் தலைமையில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர், சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்
வி.பி.கந்தசாமி, சுல்தான்பேட்டை ஒன்றிய குழு உறுப்பினர் நிர்மலா சௌந்தர்ராஜன் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர், அட்மா தலைவர்
பி.எஸ்.செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அம்சங்களாக 40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்தத்தில் சர்க்கரை பரிசோதனை , சர்க்கரை நோயாளிகளுக்கு கண் விழித்திரை சிறப்பு கண் மருத்துவரால் பரிசோதனை, சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு FFA, OCT பரிசோதனைகள் செய்யப்பட்டன. சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கும், ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான கண் நரம்பு அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் இலவசமாக லேசர் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முகாமிற்கான ஏற்பாடுகளை சூலூர் ஏர்விங் லைன்ஸ் கிளப் தலைவர் ஏ.கே.ஜான்சன், நிர்வாக செயலாளர் வினோத் குமார் , செயல் செயலாளர் மார்க்கரெட், ஒருங்கிணைப்பாளர்கள்
எஸ்.வி.டி.குமரேசன் மற்றும் சூலூர் ஏர்விங் லைன்ஸ் கிளப் பொருளாளர் எஸ்.எம்.டி.பிரகாஷ் சிறப்பாக செய்து இருந்தனர். முகாமில் அப்பநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கு கொண்டு பயன்பட்டனர்.. நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் லதா, செந்தில், ஊர் பெரியவர் வெங்கடுபதி, செல்வராஜ், நாகராஜ், நடராஜன், பட்டாளக்காரர் முத்துசாமி, ஞானப்பிரகாஷ், ஜெயமணி, கண் மருத்துவமனை மருத்துவர் லியா, மக்கள் தொடர்பு அதிகாரி பழனிசாமி மற்றும் தொழிலாளர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment