கோவையில் புதிய இடத்தில் நவீன சிறை அமைக்க உள்துறை செயலாளர் ஆய்வு
கோவையில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அமுதா தலைமையில் புதிதாக சிறைச்சாலை அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில் மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் புதிதாக சிறைச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆய்வு செய்ய உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அமுதா வருகை புரிந்தார். கோவை மத்திய சிறை வளாகத்திற்குள் சுமார் 2 மணி நேரம் சிறையில் உள்ள வசதிகள், பாதுகாப்பு வசதிகள், இங்கு சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விதமான ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மற்றும் மத்திய சிறை துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் சிறைத்துறை துணை தலைவர். சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.இந்நிகழ்வில் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவிற்கு உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அமுதா புத்தகங்களை வழங்கினார். கோவை சிறைச்சாலை என்பது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது இது போல் அல்லாது இன்னும் தரம் உயர்த்தி கட்டுவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தெலுங்கானாவில் தற்போது கட்டப்பட்டுள்ள சிறையையும் அவர் ஆய்வு செய்து அனைத்து வசதிகளையும் கொண்ட மார்டன் சிறைச்சாலை கட்டுவதற்கு ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது பிளிச்சியில் ஏற்கனவே சுமார் 80 ஏக்கர் அரசு நிலம் உள்ளது தேவைப்பட்டால் நிலம் கையகப்படுத்தப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதிஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment