கோவையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
கோவையில் அரசு அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் இதுவரை கிடைக்க பெறாமல் இருப்பின் அதைப்பற்றி விவரங்கள் பணியாற்றிய அரசுத்துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற முழு விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறைதீர்க்கும் மாதிரி படிவம் படிவத்தை பூர்த்தி செய்து இரட்டிப்பு பிரதிகளில் பூர்த்தி செய்து கலெக்டருக்கு அடுத்த மாதம் 4 தேதி கிடைக்குமாறு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்ப வேண்டும் ஓய்வூதிய குறை பற்றி மனு அனுப்ப வேண்டிய மாதிரி படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி பெயர் மற்றும் முகவரி பி பி ஓ என் ஓய்வு பெற்ற நாள் கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை குறைகள் விவரம் குறித்து தனித்தாலில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும் முந்தைய தகவல் ஏதேனும் இருப்பின் வழக்கு ஏதேனும் தொடர்ந்திருந்தால் அதன் விவரம் குறைகள் நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலக விவரங்கள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இதற்கான ஓய்வூதிய குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30 தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல. ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment