கோவை மாவட்டம் ராமகிருஷ்ண புரத்தை சேர்ந்த மூர்த்தி இவர் விளாங்குறிச்சி ரோட்டில் தள்ளுவண்டி டிபன் கடையை நடத்தி வருகிறார் எப்போதும் போல வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த நான்கு பேர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டனர் பின்பு அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மூர்த்தியிடம் இருந்து 500 ரூபாய் பணத்தை பறித்து சென்று விட்டனர் இதுகுறித்து மூர்த்தி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர் விசாரணையில் பணம் பறித்து ச் சென்றது கணபதி மோர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயது 18 மற்றும் அவருடைய கூட்டாளிகள் மூன்று பேர் அவர்களுக்கு வயது 17 என்பது தெரியவந்தது போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment