கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் இன்று சட்டப்பணிகள் ஆணையக் குழு கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருகிறது சார்பு நீதிபதியான கே எஸ் எஸ் சிவா இன்று நீதிமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது
தனது தலைமையில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூர்பாளையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது ஆய்வின் போது அங்கு பணிபுரியும் நூற்பாலை தொழிலாளர்களிடம் அவர்களின் பணி சூழ்நிலை மற்றும் சரியான ஊதியம் வழங்கப்படுகிறது சிறார்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் தொழிலாளர்களின் பிறந்த தேதி வயது அவர்கள் வசிக்கும் பகுதி தினசரி வேலை தொடங்கும் நேரம் முடியும் நேரம் இடைவேளை நேரம் முன்பணம் அளிக்கப்பட்டுள்ளதா என்றும் தொழிலாளர்கள் அவர்களுடைய பெற்றோர்களை பார்க்க அனுமதிக்கப்படுகிறதா என்றும் தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டதாக தெரிவித்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment