கோவை கணபதி ஜானகி நகர் நேரு என்பவர் மகன் 35 வயதான யோகநாதன் இவர் தனியார் டெலிகாம் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்
கடந்த சில தின ங்களுக்கு முன்பு இவரது செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது அதில் குறிப்பிட்டு இருந்த டெலிகாம் சேனலில் இவர் இணைந்துள்ளார் அதில் குறைந்த முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது இதனை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக 11 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்துள்ளார்
ஆனால் அவருக்கு கூடுதல் லாபம் எதுவும் கிடைக்கவில்லை மேலும் முதலீடு செய்யப்பட்ட தொகையும் திரும்ப கிடைக்கவில்லை தொடர்ந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த யோகநாதன் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment