கஞ்சா விற்பனை செய்தவர் கைது கோயம்புத்தூர் கடைவீதி போலீசார் சப் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்...
அப்போது உக்கடம் மஸ்ஜித் காலனி பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை சோதனை நடத்தினர் அப்போது அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த முகமது பஷீர் என்பவரின் மகன் 30 வயதான பக்ருதீன் உக்கடம் தெற்கு பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் மகன் ரியாஸ் என்பது தெரிய வந்தது தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள சேட் என்கின்ற அபுதாஹிரைத் தேடி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment