கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக காகிதப் பை தினம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
ஆண்டுதோறும் ஜூலை 12ஆம் தேதி உலக காகிதப் பை தினம் கொண்டாடப்படுகிறது. உலக காகித பை தினம் நிகழ்ச்சியில் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் மத்தியில் பிளாஸ்டிக்குக்குப் பதிலாக காகிதப் பைகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
உலக காகிதப் பை தினம் பசுமையான மற்றும் தூய்மையான உலகத்திற்காக வாதிடுவதில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகள், மக்கும் தன்மையற்றவையாக இருப்பதால், நமது பூமிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அவை பெரும்பாலும் நிலப்பரப்பு, நிலப்பரப்பில் வாழும் வன விலங்குகள் , கடல் மற்றும் ,கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மை உடையது அதற்குப் பதிலாக காகிதப் பைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்து, எதிர்கால சந்ததியினருக்காக நமது பூமியைப் பாதுகாப்பதில் பங்களிக்க முடியும்
காகிதப் பைகள் புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து தயாரிக்கப் படுகின்றன மற்றும் அவை மக்கும் தன்மை கொண்டவை, அதாவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அவற்றை மறுசுழற்சி செய்து எளிதில் சிதைக்க முடியும். காகிதப் பைகளைப் பயன்படுத்துவதன் முக்கிய நன்மைகளில் இதுவும் ஒன்றாகும்
பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், காகிதப் பைகள் மற்றும் பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்
ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் குழுக்களாக வடிவமைத்த வண்ண காகிதங்கள் மற்றும் மறுசுழற்சி காகிதம் கொண்டு கண் கவரும் பைகளை செய்து அசத்தினர் மாணவிகள் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மற்றும் நடுவராக
மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆனந்த் குமார் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து குழுக்களுக்கும் தலைமை ஆசிரியை வாழ்த்துதலையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார் இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வே; சுகுணா அவர்கள் தலைமை தாங்கினார் நிகழ்வில் வணிகவியல் துறை தலைவர் ,வித்யா நந்தினி மேலாண்மை துறை தலைவர் சக்திவேல் பேராசிரியர்கள் மற்றும் மாணவ/ மாணவிகள் கலந்து கொண்டு காகித பைகளை பார்வையிட்டனர் நெகிழி இல்லா உலகை உருவாக்கும் நோக்கத்துடன் உலக காகிதப்பை தினம் கொண்டாட பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment