இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு வங்கி ஊழியர்களின் சார்பாக பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகளை பாதுகாக்க வங்கி ஊழியர்கள் 4000 கிலோ மீட்டர் பிரசார பயணம் இன்று மேட்டுப்பாளையத்தில் துவங்கியது
பொதுத்துறை ,கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து மேட்டுப்பாளையம், சென்னை, கிருஷ்ணகிரி,தூத்துக்குடி ஆகிய நான்கு முனைகளிலிருந்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு சார்பாக வங்கிகளை காப்போம் நாட்டை காப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சார பயணம் இன்று
மேட்டுப்பாளையத்தில் துவங்கியது இந்த பிரசார பயணத்தில் வங்கியில் தனியார் மயமானால் சாதாரண மக்களுக்கு வாய்ப்புத்தொகைகு பாதுகாப்பு இருக்காது, சேவை கட்டணம் உயரும், பொது துறை, கூட்டுறவு, கிராம வங்கிகள் இல்லாமல் போனால் பொதுமக்கள் படும் அவதி,
தனியார் வங்கிகள் லாபம் மட்டும் குறிக்கோளாய் கொண்டு பொதுமக்களை கசக்கி பிழியும், சாமானிய மக்களுக்கான கடன் முழுவதும் கைவிடப்படும், வங்கிப் பணியாளர் தேர்வில் வெளிப்பட இருக்காது, பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு இருக்காது போன்ற நெருக்கடிகளை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அகில இந்திய மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 12 முதல் 14 வரை சென்னையில் நடைபெற உள்ளது.வங்கிகளை காப்போம் நாட்டை காப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து வங்கிகள் தேசியமயத்தின்
55 வது ஆண்டில் தமிழ்நாட்டில்
BEFI பிரச்சாரப் பயணத்தை ஜூலை 19 முதல் 22 வரை நடத்துகிறது.
மேட்டுப்பாளையம், சென்னை, கிருஷ்ணகிரி,தூத்துக்குடி ஆகிய நான்கு முனைகளிலிருந்து புறப்படும் குழுக்கள் ஜூலை 22 மாலை திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சங்கமிக்கின்றன
மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சிக்கு குழுவின் தலைவர் சிவலிங்கம் தாலைமை தாங்கினார் பிரச்சாரத்தை தோழர் செந்தில்குமார் மாவட்ட செயலாளர் TNGEA அவர்கள் துவக்கி வைத்தார்.
பயணத்தின் நோக்கங்களை விளக்கி BEFI மாவட்ட செயலாளர் தோழர் R மகேஸ்வரன் பேசினார்
மேட்டுப்பாளையம் தாலுகா CITU பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலார் பாஷா பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்
BEFI மாநில துணைத் தலைவர்கள் N சுப்ரமணியம்,S A ராஜேந்திரன், IBEA TN தலைவர் கணேசன்,
BSNL ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன்,
BEFI சங்கத்தின் தோழர்கள் இளையபாரதி,மயில்சாமி,
முருகேசன், நாகேந்திரன், வெங்கடேஷ், சரவணன் உட்பட வங்கி ஊழியர்களும்
மேட்டுப்பாளையம் தாலுகா CITU பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பாட்ஷா, சித்திக், பத்துருதீன் என்கிற பாபு,
சம்சுதீன், ஷாநவாஸ், அப்துல் சமது, காளீஸ்வரன், முகமது அலி ஜின்னா, ரங்கநாதன், யாசர், நிஜாமுதீன், செந்தில்குமார், குணா, அபிபுல்லா, சாமுவேல், நஸ்ருல்லா, அக்பர், நவ்ஷாத், மணி, ராஜன், குணசுந்தரி, சென்னியம்மாள், ஆனந்தி, ஜோதி, லட்சுமி, மல்லிகா, வசந்தா ஆகிய தொழிலாளர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment