கோவை மாவட்டம் காரமடை நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரியில் இன்று கல்லூரியின் நிறுவனர் திரு எம் துரைசாமி அவர்களின் நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது
ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுகுணா மற்றும் கல்லூரி துறை தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கைப்பந்து போட்டியில் பங்கு பெற்ற பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்
கைப்பந்து போட்டியில் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் வட்டார பள்ளிகள் மாணவர்கள் கூறிய கைப்பந்து போட்டியை மாவட்ட கைப்பந்து கழகச் செயலாளர் திரு வெங்கடாபதி துவக்கி வைத்தார் கைப்பந்து போட்டியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கு பெற்ற போட்டிகளில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி துரைசாமி நினைவு கோப்பை கைப்பற்றியது
காரமடை எஸ் வி ஜி வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் நிலை வென்றது கல்லூரியின் அறங்காவலர் திரு எம் ஜெயக்குமார் அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தார் சிறந்த கைப்பந்து களம் நாயகன் பரிசை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சஞ்சித் மற்றும் சிறந்த கைப்பந்து தாக்குக்களம் நாயகன் பரிசை கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவன் y கோபிநாத் வென்றார்
போட்டிகளில் பங்கு பெற்ற பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது கைப்பந்து போட்டியை காண ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் மாணவர்கள் வளர்ச்சியில் சிறப்பாக பணியாற்றும் ஸ்ரீ குமரன் கலை அறிவியல் நிறுவனத்தை பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment