காதலனுடன் மாணவி ஓட்டம்ஸகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்நிலையில் மேட்டுப்பாளையம் சமயபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது சில நாட்களில் காதலாக மாறியது இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து மற்றும் செல்போனில் பேசியும் வந்துள்ளனர் விவகாரம் மாணவியின் பெற்றோர்களுக்கு தெரிய வரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்நிலையில் நேற்றைய முன் தினம் வீட்டில் இருந்த மாணவி பெற்றோரிடம் கடைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு தன் காதலனுடன் ஓட்டம் பிடித்து விட்டார் நீண்ட நேரம் ஆகியும் மகள் வீடு திரும்ப வராததால் பெற்றோர்கள் அக்கம் பக்கம் தேடினர் ஆனால் அவர் கிடைக்கவில்லை இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மற்றும் தேடி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment