மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவில் தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
ஊர் கவுடர் திருநாவுக்கரசு தலைமையில் ஊர் பொதுமக்கள் பெண்கள் பூஜை பொருட்கள் உடன் சிம்ம வாகனம் பொறித்த கொடியேந்தி ஊர்வலமாக வான வேடிக்கைகள் தாரை தப்பட்டை முழங்க வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது
. பவானி ஆற்றங்கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகருக்கு பூஜைகள் செய்த பின்னர் சிம்ம வாகன கொடியுடன் கோவிலுக்கு வந்தனர் வனபத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன பின்னர் யாக வேள்வி நடந்தது . தேக்கம்பட்டி ஊர் கவுடர் திருநாவுக்கரசு ,கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் முன்னிலையில் யாக வேள்விகளை தனசேகர குருக்கள் , கண்ணன் குருக்கள் ஆகியோர் நடத்தினர். தொடர்ந்து கொடிமரத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment