கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் மேற்படி குற்ற சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடி வந்தனர் இந்நிலையில் இந்த குற்றங்களில் ஈடுபட்டு வந்த கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரது மகன் 40 வயதான சண்முகம் என்பவரை இன்று கைது செய்து அவரிடம் இருந்து நான்கு சவரன் 3 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment