பொள்ளாச்சி ஆனைமலை அருகே தேவிபட்டினம் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாஞ்சாலி வயதை 50 அந்த பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வருகிறார் இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றால் வேலை முடிந்து நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ஐந்தரைப் பவுன் தங்க நகை திருட்டுப் போனது தெரிய வந்தது உடனே பாஞ்சாலி அம்மாள் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment