கோயம்புத்தூர் ராம் நகரில் உள்ள டிபி கிளாசஸ் சார்பில் சி ஏ தேர்வில் பல்வேறு நிலைகளில் தேர்வானவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவானது இன்று ஓட்டல் விஜய் பார்க்கில் சிறப்பாக நடைபெற்றது விழாவின் துவக்கம் கடவுள் வாழ்த்து உடன் குத்துவிளக்கேற்றி துவங்கப்பட்டது விழாவில் ஓய்வு பெற்ற அரசு வருவாய் துறை அலுவலர் சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் அருண் ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் மற்றும் அகத்தமிழ் ஸ்ரீ அருண்குமார் சி ஏ ஜலபதி சமூக ஆர்வலர் சி தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர் விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை டிபி கிளாசஸ் நிறுவனர் மற்றும் தலைவர் தீபக் பாண்டியன் சிறப்புடன் அமைத்துக் கொடுத்திருந்தார் மேலும் விழாவில் பங்கேற்க தங்களின் பெற்றோர்களுடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழர் குரல் இணையதள சேதி பிரிவு
No comments:
Post a Comment