தொழில் வரி தொடர்பாக குறுந்தொழில் நிறுவனங்களிடம் ஆலோசனை பெற்று முறைப்படுத்தி டோட் வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் தலைவர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் அளித்த மனுவில்
கோவை மாநகரில் இயங்கும் 15000 மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களில் 1.5 லட்சத்திற்கும்மேற்பட்டோர் பணி புரிகின்றனர் ஆட்டோ மொபைல் பம்ப் செட் என பல வகையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் ஜாப் ஆர்டர் கிடைப்பதில்லை கடும் நெருக்கடியை சந்திக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது
இச்சூழ்நிலையில் ஒரு வாரத்திற்குள் தொழில் வரியை செலுத்தாவிட்டால் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இருந்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது குறுந்தொழில் கூடங்களில் ஐந்து எச்பி முதல் 50 எச்பி வரை மின் இணைப்பு பெற்று வாடகை கட்டிடத்தில் சில சொந்த இடங்களிலும் தொழில் புரிகின்றனர் தொழில் அமைப்புகளிடம் ஆலோசனை பெற்று தொழில்வரியை முறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும் அதுவரை நோட்டீஸ் கொடுப்பதை நிறுத்தியும் மேல் நடவடிக்கையை எடுப்பது போன்ற செயல்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறுந்தொழில் முனைவோர் சங்கத் தலைவர் மனு அளித்துள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment